ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா அதிர்ச்சி தோல்வி

டாக்கா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. அரையிறுதியில் ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. முதல் 2 நிமிடத்திலேயே ஜப்பான் வீரர்கள் ஷோடா யமடா (1’), ரெய்கி புஜிஷிமா (2’) கோல் அடித்தது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. யோஷிகி (29’), கவாபே (35’), ஊகா ரியோமா (41வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடித்து அசத்தினர். இந்தியா சார்பில் தில்பிரீத் (17’), ஹர்மான்பிரீத் (53’), ஹர்திக் (59’) கோல் போட்டனர். லீக் சுற்றில் ஜப்பான் அணியை 6-0 என பந்தாடிய இந்தியா, அரையிறுதியில் தோற்றது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இறுதிப் போட்டியில் ஜப்பான் - தென் கொரியா, வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ளன.

Related Stories: