எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக்: பிரியங்கா குற்றச்சாட்டு

லக்னோ: தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு கூட ஹேக் செய்யப்பட்டதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது தொலைபேசி உரையாடலை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒட்டு கேட்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதை விடுங்கள், எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கூட ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு வேறு வேலையே கிடையாதா? காங்கிரஸ் கட்சியின், ‘நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்,’ என்ற பிரசாரம்தான், பிரயக்ராஜில்  பெண்களிடையே பிரதமர் மோடியை கலந்துரையாடுவதற்கு கட்டாயப்படுத்தி உள்ளது. பெண்கள் நலனுக்காக பிரதமர் பணியாற்ற வேண்டும். பெண் சக்தியின் முன் பிரதமர் பணிந்துள்ளார். இது தான் உத்தரப்பிரதேச பெண்களின் வெற்றியாகும்,” என்றார்.

Related Stories: