பண மோசடி வழக்கில் உறவினர்கள் கைது: தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு..!!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி. மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது.

மேலும், விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் விருதுநகரில் வழக்கு பதியப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் வந்ததும், உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர்.

மோசடி வழக்கில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது. மேலும், 4 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories: