திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம் ஏன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம் உள்ளிட்டவற்றிற்காக போராடிய ஒருவரான அயோத்திதாச பண்டிதர், பத்திரிக்கை கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என இப்படி பன்முகம் கொண்டவர் ஆவார்.

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இவருடைய பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் அயோத்திதாசர் பண்டிதாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

The post திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: