ஐஎன்எஸ் தலைவராக மோகித் ஜெயின் தேர்வு

புதுடெல்லி: இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, மோகித் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் (ஐஎன்எஸ்), 82வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், 2021-22 ஆண்டுக்கான ஐஎன்எஸ் தலைவராக, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் மோகித் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவராக,  சாக்ஷி பத்திரிகையின் கே.ராஜ பிரசாத் ரெட்டி, உதவித் தலைவராக ஆஜ் சமாஜ் பத்திரிகையின் ராகேஷ் சர்மா, கவுரவப் பொருளாளராக அமர் உஜாலாவின் தன்மய் மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஐஎன்எஸ்.சின் செயற்குழு உறுப்பினர்களாக 41 பேர் இடம் பெற்றுள்ளனர்.  இதில், ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன்), பாலசுப்பிரமணிய ஆதித்தன் (தினத்தந்தி), ஆர்.லட்சுமிபதி (தினமலர்), எல்.ஆதிமூலம் (ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்), விவேக் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ்), ஷிவேந்திர குப்தா (பிசினஸ் ஸ்டாண்டர்டு), எம்.வி.ஸ்ரேயஸ் குமார் (மாத்ருபூமி ஆரோக்கிய மசிகா), பிரவீன் சோமேஸ்வர் (இந்துஸ்தான் டைம்ஸ்), கே.என்.திலக்குமார் (டெக்கான் ஹெரால்டு மற்றும் பிரஜாவாணி), ஜெயந்த் மேமன் மேத்யூ (மலையாள மனோரமா), சைலேஷ் குப்தா (மிட் டே), ஐ.வெங்கட் (அன்னதத்தா) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: