மாமல்லபுரம் புலிக்குகையில் கமாண்டோ படை வீரர்கள் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை பகுதியில் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் ஆய்வு செய்தனர். மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையையொட்டி சாலவான் குப்பம் கிராமத்தில் புராதன சின்னமான புலிக்குகை அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால் 7ம் நூற்றாண்டில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட, ஒரு பாரம்பரிய நினைவு சின்னம். இதனை, உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. முழுக்க, முழுக்க பல்லவர்கள் புலிகளின் தலைகளை சிற்பங்களாக வடித்து இங்குள்ள பாறையில் அழகுற வடிவமைத்துள்ளனர். இந்த புலிக்குகையை மாமல்லபுரம் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மதியம் உதவி கமாண்டண்ட் ராஜா மற்றும் 5க்கும் மேற்பட்ட காமாண்டோ வீரர்கள் புலிக்குகையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் வருகை, எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது. எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நுழைவாயிலில் காவலர்கள் செயல்படும் விதம் ஆகியவை குறித்து, தொல்லியல் துறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

Related Stories: