நெல்லை ரெட்டியார்பட்டி பள்ளியில் இல்லம் தேடி கல்வி கருத்தாளர் பயிற்சி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி  ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் நெல்லை கலெக்டர் விஷ்ணு ஆலோசனைப்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, கூடுதல் திட்ட அலுவலர் சிவராஜ் ஆகியோர்  வழிகாட்டுதலின்படி  நடந்த பயிற்சியை நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தொடங்கி வைத்தார்.  பயிற்சியில் 11 வட்டார வள மையங்களில் இருந்து 66 தொடக்கநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், 66 உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தாளர்களாக ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சமூகப்பணி ஆர்வலர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் செயல்பட்டனர். இப்பயிற்சி மீண்டும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு வட்டார அளவில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி  ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெபர்சன் மற்றும் புஷ்பா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: