அடிலெய்ட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். இதற்காக ஆடும் லெவனை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.