உக்ரைனுக்குள் நுழைந்தால் கடும் விளைவுகளுடன், தக்க பதிலடி தரப்படும்: ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரிட்டன் அரசு கடும் எச்சரிக்கை!!!

லண்டன்: உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் எல்லைப் பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்திருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இந்நிலையில் பிரிட்டனின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற G-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய பிரிட்டன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்  லிஸ் டிரஸ், உக்ரைனை கைப்பற்ற முயன்றால் ரஷ்யா கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட  லிஸ், ரஷ்யா தனது நிலையில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். G-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீனாவின் நிர்பந்தமான பொருளாதார கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக  லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.

Related Stories: