விஜய்யுடன் மூன்றாவது முறை ஜோடியா?...கீர்த்தி சுரேஷ் தகவல்

ஐதராபாத்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 65வது படம், ‘பீஸ்ட்’. அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதையடுத்து விஜய் நடிக்கும் 66வது படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே அவர் விஜய் ஜோடியாக ‘பைரவா’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், ஐதராபாத்தில் பேட்டி அளித்த கீர்த்தி சுரேஷ், ‘விஜய்யின் 66வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் வதந்தி’ என்று சொன்னார்.

Related Stories: