உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரானார் தமிழக அரசு வழக்கறிஞர் ஜி.உமாபதி

புதுடெல்லி: காவிரி, மேகதாது உட்பட பல முக்கிய வழக்குகளில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் ஜி.உமாபதியை மூத்த வழக்கறிஞராக நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அட்வகேட் ஆன் ரெக்கார்ட் மற்றும் வழக்கறிஞர்கள் 18 பேரையும், அதேபோன்று ஏழு உயர்நீதிமன்ற ஓய்வு தலைமை நீதிபதிகளையும் மூத்த வழங்கறிஞர்களாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் ஓய்வு தலைமை நீதிபதிகளை பொருத்தமட்டில் ஜெ.என்.பட் (குஜராத்/பாட்னா), சுரேந்திர குமார் (அலகாபாத்), எஸ்.கே.கேங்லி (மத்தியப்பிரதேசம்), வினோத் பிரசாத் (அலகாபாத்/ஒரிசா), எல்.நரசிம்ம ரெட்டி (ஆந்திரா/பாட்னா), ஏ.ஐ.எஸ்.சீமா (பாம்பே) மற்றும் நுசத் அலி (ஆந்திரா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அட்வகேட் ஆன் ரெக்கார்ட் மற்றும் வழக்கறிஞர்கள் 18பேரை மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை பொருத்தமட்டில் தற்போது காவிரி, மேகதாது, பாலாறு உட்பட நீர் நிலைகள் தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகளை தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வரும் ஜி.உமாபதியும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: