12 ஆண்டு சிறை மாஜி பிரதமருக்கு தண்டனை உறுதி

புத்ராஜெயா: ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் நஜீப் ரசாக் பிரதமராக இருந்த போது கடந்த 2018ம் ஆண்டில், மேம்பாட்டு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து 2020ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நஜீப் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் உறுதியாகி இருக்கிறது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நஜீப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories:

More