ஜெர்மனி புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு

பெர்லின்: ஜெர்மனியின் புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக கடந்த 2005ம் ஆண்டு பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து 16 ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்தார். உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மெர்க்கல் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெர்க்கலின் கட்சியும் குறைந்த இடங்களை மட்டுமே பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஓலாப் சோல்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 736 உறுப்பினர்களில், ஜனநாயக கட்சி கூட்டணிக்கு மொத்தம் 416 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 395 எம்பி.க்கள் சோல்சுக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தனர். இதனை தொடர்ந்து ஓலாப் புதிய அதிபராகிறார்.

Related Stories: