இரண்டு கண்களும் ஒட்டிப் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

சின்னமனூர் : சின்னமனூர் அருகே, மார்க்கையன்கோட்டையில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவர், வெள்ளாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இது சினைப்பிடித்து ஈன்றெடுக்கும் தருவாயில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மூன்று குட்டிகளை ஈன்றது. இதில், ஒரு குட்டியின் முகத்தில் இருகண்களும் ஒன்றாக பெரிய அளவில் உள்ளது. வாய் முன்பாக தோளால் மறைத்து நாக்கும் தொங்குகிறது. மேலும் 4 கால்களில், முன்னங்கால்கள் இரண்டும் குட்டையாக உள்ளது. இதனால், மனிதனைப் போல ஆட்டுக்குட்டி நிமிர்ந்து நிற்கிறது. இந்த அதிசய வெள்ளாட்டுக் குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Related Stories:

More