பணத்தை பறித்த கொள்ளையன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

நியூயார்க்:  அமெரிக்காவில் துப்பாக்கி காலசாரம் அதிகமாகி விட்டது. கொலை, கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, மர்ம நபர்களால் இந்தியர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கேரள இளம்பெண்ணை மேல் மாடியில் வசிக்கும் நபர் சுட்டுக் கொன்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இரண்டு இடங்களில் காஸ் நிலையம் வைத்திருப்பவர் அமித்குமார் படேல். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், வார இறுதி நாட்களில் காஸ் நிலையத்தில் வர்த்தகமாகும் பணத்தை திங்களன்று வங்கியில் செலுத்துவது வழக்கமாகும்.

இதேபோல், நேற்று முன்தினமும் அமித் குமார் பணத்தை டெபாசிட் செய்வதற்காக அருகில் இருந்த வங்கிக்கு சென்றார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம நபர், வங்கி வாசலில் அமித்குமாரிடம் இருந்த பணத்தை பறிக்க முயற்சித்தார். அப்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அமித்குமாரை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழ, பணத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர் தப்பி சென்றார். காலை பத்து மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அருகிலேயே காவல் நிலையம் அமைந்திருந்தும் இதுபோன்ற துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: