வால்பாறை எஸ்டேட்டில் காட்டு யானைகள் கூட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

வால்பாறை: வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில், காட்சி முனை அருகே நேற்று காலை முதல் 11 காட்டு யானைகள் உலா வந்ததால், காட்சிமுனை காண்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அப்பகுதியில் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் நல்ல காத்து எஸ்டேட்டில் இருந்து 3 யானைகள் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை, படகு இல்லம் அருகே கடந்து ஸ்டேன்மோர் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றது. தேயிலை தோட்டம் மற்றும் ஆற்றை கடந்து யானைகள் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வால்பாறை தாலுகா முழுவதும் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் ரோந்து சென்று யானைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்கு வாகன வசதி, உரிய எரிபொருள் வழங்குவதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: