அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை அரசு முறையில் புறக்கணிக்க அமெரிக்க முடிவு

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை அரசு முறையில் புறக்கணிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள், அதிகாரிகள் செல்ல மாட்டார்கள். அமெரிக்க அரசு அதிகாரிகள் யாரும் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயல், விளையாட்டில் அரசியலை நுழைக்கும் நடவடிக்கை என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஸிங்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி, அரசுமுறை புறக்கணிப்பு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Stories:

More