பூனை காணவில்லை; கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5ஆயிரம் பரிசு: கோவை அருகே ஒட்டப்பட்ட போஸ்டரால் மக்கள் வியப்பு

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகர பகுதியில் பூனை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5ஆயிரம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும் எனவும் கண் திருஷ்டி மட்டுமின்றி செய்வினைகள், சூனியம், பேய் பிசாசுகள் போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் பெற்றது. இந்த பிராணிகள் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பெயர் ஜெயஸ்ரீ, வயது ஆறு, அடையாளம் உதட்டில் மச்சம், நவம்பர் 29ம் தேதி முதல் காணவில்லை, நீங்கள் எங்கள் பூனையை கண்டீர்கள் என்றால் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும், பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படுமென பூனையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் கோவை ராமநாதபுரம் பகுதியில் ஒட்டியிருப்பது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: