காணாமல் போன போர் விமான டயர்கள் மீட்பு

லக்னோ:  உத்தர பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள பக்‌ஷிகதலாப் பகுதியில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து கடந்த மாதம் 27ம் தேதி ராஜஸ்தான் மாநிலம்,   ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு லாரியில்  ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.  அதில் இருந்த  மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்கள் காணாமல் போயின. அவற்றை யாராவது திருடி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இது தொடர்பாக போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், டயரை திருடிச் சென்ற 2 பேர் சிக்கினர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘டயர்களை   திருடவில்லை. சாலையில் விழுந்து கிடந்தன. அவை லாரி டயர்களாக இருக்கலாம் என்று எடுத்து சென்று விற்றோம்,’ என்று தெரிவித்தனர்.

போலீசார் அந்த டயர்களை கடை ஒன்றில் இருந்து மீட்டனர்.

Related Stories:

More