ஸ்ரீகாளஹஸ்தியில் மார்கழி மாத பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி:  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி, வருகிற 16ம் தேதி முதல் 15.1.22 வரை  நடக்கும் பூஜைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு. 4 மணிக்கு மங்கல வாத்தியங்கள். காலை 4.15க்கு திருமஞ்சன சேவை. 4.30க்கு கோபூஜை (சுப்ரபாத சேவை இல்லை) தேவாரம். 5 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி முதல் கால அபிஷேகம்,  இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால அபிஷேகங்கள் கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்படும்.

காலை 7 மணிக்கு துணை சன்னதிகளுக்கு நெய்வேத்தியம் நடக்கும். இதைத்தொடர்ந்து, கொரோனா விதிமுறைகளுடன் 7.30 மணிக்கு ஆண்டாள் (உற்சவ மூர்த்தி) கோயிலுக்குள் ஊர்வலம் நடத்தப்படும். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம். மாலை 4 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More