நரிக்குடி அருகே குடியிருப்புக்குள் புகுந்தது மழைநீர்; பொதுமக்கள் அவதி

காரியாபட்டி: நரிக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை அருகே தரைப்பாலத்தில் ஆதித்தியனேந்தல், நரிக்குடி  கண்மாய்கள் நிரம்பி மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறி சாலையிலும், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தது. பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் செல்வோரும் தண்ணீரை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் மறுகால் வழியே தண்ணீர் வெளியேறி செல்ல வரத்து கால்வாய் இல்லாததால் குடியிருப்பு வீடுகளை சூழ்ந்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இரவில் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். மழைநீர் தேங்கிய அனைத்து பகுதிகளிலும் இரவில் மக்கள் வெளியேற முடியவில்லை. சில இடங்களில் தண்ணீரில் பாம்பு மற்றும் வி‌ஷப்பூச்சிகளும் மிதந்து வந்ததால் பீதியில் உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பலர் வீடுகளில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மழைநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடி அருகே குடியிருப்புக்குள் புகுந்தது மழைநீர்; பொதுமக்கள் அவதி

காரியாபட்டி: நரிக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை அருகே தரைப்பாலத்தில் ஆதித்தியனேந்தல், நரிக்குடி  கண்மாய்கள் நிரம்பி மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறி சாலையிலும், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தது. பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் செல்வோரும் தண்ணீரை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் மறுகால் வழியே தண்ணீர் வெளியேறி செல்ல வரத்து கால்வாய் இல்லாததால் குடியிருப்பு வீடுகளை சூழ்ந்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இரவில் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். மழைநீர் தேங்கிய அனைத்து பகுதிகளிலும் இரவில் மக்கள் வெளியேற முடியவில்லை. சில இடங்களில் தண்ணீரில் பாம்பு மற்றும் வி‌ஷப்பூச்சிகளும் மிதந்து வந்ததால் பீதியில் உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பலர் வீடுகளில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மழைநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: