வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏற்பாடு

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.548, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (ட்டி2) துறை, நாள்.02.12.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சிறப்பு சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது  01.03.2022-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: