வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வலுவான நிலையில் இலங்கை அணி

காலே: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆட்டத்தின் 2வது  இன்னிங்சில் இலங்கை 328ரன் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இலங்கையின் காலே நகரில் நடக்கும் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 204ரன்னிலும், வெ.இண்டீஸ் 253ரன்னிலும் ஆட்டமிழந்தது. அதனையடுத்து 49ரன் பின்தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை நேற்றும் தொடர்ந்து விளையாடியது. அரைசதம் விளாசிய நிஷாங்கா 66ரன்னில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆனால் தனஞ்ஜெயா டி சில்வா பொறுப்புடன் விளயைாடி சதம் விளாசினார்.  

அதனால் 4ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இலங்கை 119ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 328ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. நிஷாங்கே 11 பவுண்டரி, 2சிக்சர்கள் விளாசி 153*, லசித் 25*ரன்னுடனுன் களத்தில் உள்ளனர். வெ.இண்டீஸ் தரப்பில்  வீராசாமி பெருமாள் 3, ரோஸ்டன் சேஸ் 2, கிரெய்க் பிரத்வைட் ஒரு விக்கெட் வீழத்தினர். கடைசிநாளான இன்று 279ரன் முன்னிலையில் உள்ள இலங்கை விரைவாக டிக்ளேர் செய்யக்கூடும். அதன் மூலம் வெ.இண்டீஸ் நெருக்கடியுடன் 2வது இன்னிங்சை தொடங்கும்.

Related Stories:

More