கோயிலின் பின்புறம் ஏராளமான கடைகள் உள்ளதால் கடற்கரையில் நின்று பகவதியம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது ஐயப்பன் சீசன் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் கன்னியாகுமரியிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது சபரிமலையில் கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலியாக கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இன்று காலையும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடற்கரையில் அதிகாலை சூரிய உதயம் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில் முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் ஐயப்ப பக்தர்கள் கடற்கரையில் நின்றபடி பகவதியம்மனை தரிசனம் செய்வார்கள்.  கோயில் பின்புறம் உள்ள பகுதியில் 100 மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முன்புபோல கடற்கரையில் இன்று பகவதிஅம்மனை தரிசனம் செய்ய முடிவதில்லை.

மேலும் இந்த கடைகள் நடைபாதையும் ஆக்கிரமித்துள்ளதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப  பக்தர்கள் கடற்கரைக்கு நடந்த செல்ல முடியாமல் நிலை உள்ளது. மேலும் சங்ராச்சாரியார் மடம், கடற்கரை விவேகானந்தர் மண்டபம், சுனாமி பூங்கா போன்றவற்றை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: