விராலிமலை பகுதியில் விவசாய நிலத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

விராலிமலை : தொடர்மழை காரணமாக விவசாய நிலத்திற்குள் புகுந்த மழைநீர் காரணமாக பயிர்கள் சேதம் அடைந்தது.வடகிழக்கு பருவ மழையின் காரணமாக விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கூரை மற்றும் ஓட்டு வீடுகளின் சுவர்கள் விழுந்து சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 6.4 சென்டி மீட்டர் அளவு பெய்த கனமழைக்கு ஈஸ்வரி நகரில் உள்ள வீரமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

அதேபோல் விராலிமலை அருகே தரைபாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விராலிமலையிலிருந்து தேராவூர் செல்லும் சாலையில் கூத்தகுடி அருகே தரைபாலம் தற்போது பெய்த மழையின் காரணமாக நேற்று சேதமடைந்தது. இதனால் கூத்தகுடி பகுதியிலிருந்து தேராவூர், மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories: