செம்பு சொம்புக்கு ‘சிவப்பு சல்பர்’ பூச்சு யுடியூப் பார்த்து ரைஸ் புல்லிங் மோசடி: திருப்பதியில் 4 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள அலிபிரி காவல் நிலையத்தில் டிஎஸ்பி முரளிகிருஷ்ணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதீத சக்தி வாய்ந்த ரைஸ் புல்லிங் பாத்திரம் எனக்கூறி ரூ.1.60 லட்சம் பணம் பெற்று கொண்டு சிலர் ஏமாற்றியதாகவும், செப்பு பாத்திரத்தை கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்து கொடுத்த பணத்தை திருப்பிச் தருமாறு பலமுறை கேட்டும் தராததால் பாதிக்கப்பட்ட குண்டூரை சேர்ந்த ஷேக் யாசின்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் திருப்பதியில் உள்ள சுப்பா காலனி, முதல் கிராஸ் அருகே போலீசார் ரோந்து சென்ற போது 4 பேர் போலீசாரை  பார்த்ததும் தப்பிக்க முயன்றனர்.

 

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ரைஸ் புல்லிங் பாத்திரம் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்ததாக தெரிவித்தனர். மேலும் யுடியூப் பார்த்து சிவப்பு சல்பர் என்ற ரசாயனம் பூசிய கருப்பு பாத்திரத்திற்கு அதீதசக்தி இருப்பதாக கூறி அதை குண்டூரைச் சேர்ந்த வியபாரியிடம்  கொடுத்து ஏமாற்றி ரூ.1.60 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து மதனப்பள்ளியை சேர்ந்த ஹேமந்த் குமார்(28), திருப்பதியை சேர்ந்த மனோஜ்குமார்(34), விஜயகுமார்(44), நாகராஜ்(34) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1.54 லட்சம் ரொக்கம், 1 கருப்பு செம்பு பாத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.

Related Stories: