சிவகாசி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி; கனமழைக்கு மறுகால் பாயும் கண்மாய்கள்.!

சிவகாசி: சிவகாசி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 5 கண்மாய்கள் நிறைந்து மறுகால் திறந்து விடப்பட்டது. சிவகாசி பகுதிகளில் கனமழை காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மழைநீர் வர துவங்கியது. கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணிகள் நிரம்பியது. மேலும் சிவகாசி பகுதிகளில் உள்ள 46 கண்மாய்களுக்கும் நீர்வரத்து இருந்தது.

இதில் சித்துராஜபுரம் புதுக்கண்மாய், ஆனைக்குட்டம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய், திருத்தங்கல் செங்குளம் கண்மாய், உறிஞ்சி குளம் கண்மாய்கள் நிறைந்து மறுகால் போனது. மேலும் 15க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு 50 சதவிகித தண்ணீர் வந்துள்ளது. இக்கண்மாய்களை ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: