கே.ேக.நகர் ராஜமன்னார் சாலை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.நகர் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, ேக.கே.நகர் ராஜமன்னார் சாலை மற்றும் வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுடுள்ளது.

மழையால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:

* அண்ணா பிரதான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடப்பதால் கே.ேக.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல், உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகிறது.

* ேக.கே.நகர் ராஜமன்னார் சாலையில் போக்குவரத்து 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

* வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் போக்குவரத்து ஆற்காடு சாலை செல்ல கேசவர்த்தினி சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

* வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More