20 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்தது வறண்ட போர்வெல் வற்றாத நீருற்றானது-சித்தூர் அருகே கனமழையால் அற்புதம்

சித்தூர் : சித்தூர் அருகே 20 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த வறண்டு போன போர்வெல்லில் நீருற்று பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் அற்புதமாக பார்க்கின்றனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. மேலும், பகுதா மற்றும் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தூர் பெனூமூர் அடுத்த கலவகுண்டா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு தமிழகத்தின் பொன்னையாற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. அதோடு, கலவகுண்டா பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கலவகுண்டா பகுதியில் எஸ்டி காலனியில் பாழடைந்த போர்வெல் கிணறு உள்ளது. இந்த போர்வெல் வறண்டு போனதால், கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. போர்வெல்லில் போடப்பட்ட கைப்பம்பு பயன்பாடின்றி இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தற்போது அந்த போர்வெலில் நீருற்று அதிகரித்து தானாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக வறண்டு போய் கிடந்த போர்வெல்லில் தானாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அப்பகுதிமக்கள் அற்புதமாக பார்த்து வருகின்றனர்.

Related Stories: