காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சி போல் வெளியேறும் உபரிநீர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சி போல் உபரிநீர் வெளியேறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி வருவதால் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 340 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 39 ஏரிகள் 70 சதவீதமும், 1 ஏரி 50 சதவீதமும், 1 ஏரி 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 483 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 45 ஏரிகள் 70 சதவீதம் நிரம்பி உள்ளன. இதேபோல் பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து தொடர்ந்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள மாகறல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சி போல் உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: