கே.வி.குப்பம் அருகே கால்வாய் உடைந்தது வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் தேவரிஷிகுப்பம், கெம்மங்குப்பம், மாச்சனூர் வழியாக செல்லும் மோர்தானா இடதுபுற கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் அதிகரிப்பால் கால்வாய் முழுவதுமாக நிரம்பி கரையில் நேற்றிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மாச்சனூர்-தேவரிஷிகுப்பம் சாலை துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள், விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. மாச்சனூரில் இருந்து தேவரிஷிகுப்பம் செல்லும் தார்சாலை துண்டிக்கப்பட்டது.

இதனால் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்ல வழியின்றி சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிக்கொண்டு செல்கின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்வாய் உடைந்து, வெள்ளம் ஊருக்குள்  புகுந்தது. அதனை பொதுப்பணித்துறையினர் சீரமைத்த நிலையில் தற்போது மீண்டும் கால்வாயின் கரை உடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கால்வாய்கள் உடையாமல் இருக்க அதிகாரிகள் நிரந்தர தீர்வு எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: