சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கி விஏஓ மோசடி குற்றத்தை ஏற்கும்படி டார்ச்சரால் விஷம் குடித்த உதவியாளர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒன்னப்பகவுண்டனஅள்ளியில் விஏஓவாக இருப்பவர் ரவீந்திரன்(35). இவர் கடந்த 2018-2020 வரை, பாப்பாரப்பட்டி விஏஓவாக பணியாற்றினார். அப்போது சிலரிடம், பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவீந்திரன் ஒன்னப்பகவுண்டனஅள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். பணம் கொடுத்தவர்கள் கேட்கவே, புதிய விஏஓ வின் கையெழுத்து மற்றும் சீல் ஆகியவற்றை ரவீந்திரன் போலியாக போட்டு, சான்றிதழ் அளித்துள்ளார்.

இந்த மோசடி பற்றி புகார் வரவே மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வருவாய்த்துறை அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார். இதில் இருந்து தான் தப்பிக்க அங்கு உதவியாளராக பணியாற்றும் ரவி(43)யிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. செய்யாத குற்றத்தை அதிகாரிகள் முன்னிலையில் எதற்காக தாம் ஒப்புக்கொள்ள என விசாரணைக்கு பயந்து, கிராம உதவியாளர் ரவி, நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: