சிவகங்கை அருகே சுற்றுலாத்தலமாக மாறிய கண்மாய்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான கண்மாய், குளங்கள், கண்மாய்கள் நிறைந்துள்ள நிலையில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சிவகங்கை அருகே ஏரியூரில் ஏரி கண்மாய் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கண்மாயில் நீர் நிரம்பிய நிலையில் வடிகால் வழியாக நீர் நிறைந்து வெளியேறி செல்கிறது.

ஏரி கண்மாயின் வடிகால் வழியே நீர் வெளியேறும் காட்சியை காண அருகிலுள்ள மேலயான்பட்டி கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அணைக்கட்டுகளில் இருந்து வெளியேறும் நீரில் குளிப்பது, செல்பி எடுப்பது என இப்பகுதி கிராமமக்களின் மினி சுற்றுலாத்தலமாக இந்த ஏரி கண்மாய் பகுதி உள்ளது. மக்கள் அதிகளவு வருவதால் இப்பகுதியில் திடீர் கடைகளும் முளைத்துள்ளன.

Related Stories: