'நீங்கள் நாட்டுக்கு பிரதமராக இருக்கலாம்; அவைக்கு நானே பொறுப்பு': இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சனை எச்சரித்த சபாநாயகர்..!!

இங்கிலாந்து: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதமர் போரிஸ் ஜான்சனை சபாநாயகர் எச்சரித்த வீடியோ பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் ஹென்டாக்ஸ், ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவேசமாக பதிலளித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவரை மிரட்டும் தோணியில் கேள்விகளை வீசினார். அச்சமயம் அவரை சமாதானம் செய்ய முற்பட்ட சபாநாயகர் லெஸ்லே ஹோய்லி, நீங்கள் நாட்டுக்கு பிரதமராக இருக்கலாம்; இந்த அவை எனது பொறுப்பில் உள்ளது என்றார்.

இதுகுறித்து லெஸ்லே ஹோய்லி பேசியதாவது, உத்தரவு... பிரதமர், பிரதமர்...அமருங்கள். பிரதமர் உங்களுக்கு நான் சவால் விடவில்லை. நீங்கள் நாட்டுக்கு பிரதமராக இருக்கலாம். ஆனால் இந்த அவைக்கு நானே பொறுப்பு. அவையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார். பிரதமரை வாக்குவாதம் செய்யாமல் அமரும்படி சபாநாயகர் லெஸ்லே ஹோய்லி தெரிவித்தார். இதனை ஏற்று பிரதமரும் அமைதியாக அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் பார்வையை கவர்ந்துள்ளது.

Related Stories: