வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கத்தை வென்றது இந்திய அணி..!!

டாக்கா: வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.  வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. 6 அணிகளே இடம்பெற்றிருந்த மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா ‘பை’ வாய்ப்பு பெற்று நேரடியாக அரையிறுதிக்கு வந்தது.

இதில் அங்கிதா பகத், மது வேத்வான், ரிதி ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி 6-0 (51-48, 56-50, 53-50) என்ற கணக்கில் வியத்னாம் மகளிா் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.

இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது. இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது.

Related Stories: