மழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 5,389 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 32.84 அடியாக உயர்ந்துள்ளது. 22 மி.மீ மழை பெய்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 437 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 16.62 அடியாக உயர்ந்துள்ளது. 42 மி.மீ மழை பெய்தது. புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,366 கனஅடியாக உள்ளது.நீர்மட்டம் 18.38 அடியாக உயர்ந்துள்ளது. 27 மி.மீ மழை பெய்துள்ளது. புழல் ஏரி தற்போது மொத்த கொள்ளளவில் 81.33% நீர் நிரம்பியுள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3.300 மி.க.அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,040 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 20.80 அடியாக உயர்ந்துள்ளது. 36 மி.மீ  மழை பெய்துள்ளது. வீராணம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 62 கனஅடி. மொத்த நீர்மட்டமான 8.50 அடியில் தற்போது 6.30 அடியை எட்டியது. வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 20 மி,மீ மழை பெய்துள்ளது. தற்போது 63.60% ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. தேர்வாய் கண்டிகை அணை முழு நீர்மட்டமான 36.61 அடியை எட்டி 100% நிரம்பியுள்ளது. 27 மி.மீ மழை பெய்துள்ளது.

Related Stories: