ஜம்மு காஷ்மீரில் தந்தியடிக்கும் பல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மைனஸ் நிலையில் குளிர் வாட்டி எடுக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தற்போது குளிரான தட்பவெப்பநிலை நிலவி வருகின்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை உறை பனிக்கும் கீழே நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சீசனில் இயல்பை விடவும் வெப்பநிலை பல டிகிரி குறைவாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதிகபட்சமாக ஸ்ரீநகரில் கடந்த திங்களன்று இரவு மைனஸ் 1.2 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை இருந்தது. இது நேற்று முன்தினம் இரவு மைனஸ் 1.5 டிகிரி செல்சியசாக குறைந்தது. இந்த சீசனில் மிகவும் குளிரான இரவாக அது அமைந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதேபோல், அமர்நாத் யாத்திரைக்கான அடிவார முகாமாகிய பாகல்காமில் மைனஸ் 4.7 டிகிரி செல்சியஸ், குல்மார்க்சில் மைனஸ் 2 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகி இருந்தது.

Related Stories: