குவாதலஜாரா: டபுள்யுடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் மோதுகிறார். உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடர், மெக்சிகோவின் குவாதலஜாரா நகரில் நடந்து வருகிறது. ரவுண்டு ராபின் லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த முகுருசா, படோசா, அனெட், சாக்கரி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனைகள் முகுருசா (6வது ரேங்க்), பவுலா படோசா(7வது ரேங்க்) மோதினர். அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த முகுருசா 6-3, 6-3 என நேர் செட்களில் படோசாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.