இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: பட்டியலில் 100 நாடுகள்

புதுடெல்லி: கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இப்பட்டியலில் 100 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே உலகம் முழுவதும் பயண தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தடைகளை வாபஸ் பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள், கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள், இந்தியாவில் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 100 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம், பயணத்திற்கு முன்பாக 2 நாள் முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்காக வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

Related Stories: