கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது: கலெக்டரிடம் இருளர்கள் மனு

பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 20 குடும்பங்களை சேர்ந்த  இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் மார்க்கத்தில் வெளிகரம், திருமலைராஜிபேட்டை, கீழ்கால்பட்டடை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று வர கொசஸ்தலை ஆற்றின் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த  அதிமுக பிரமுகர் ஒருவர், கொசஸ்தலை ஆற்றில் அருகில் இருளர் குடியிருப்பு பகுதியில் தனது விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் தொடங்குவதற்காக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பேரூராட்சி அனுமதி வழங்காத நிலையில், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி  கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தபோாதிலும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி  டாஸ்மாக் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று இருளனர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட கெலக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Related Stories: