ஜெயலலிதாவின் கார் டிரைவர் மர்மசாவு கனகராஜ் பைக் மீது மோதிய கார் டிரைவரிடம் கிடுக்கிப்பிடி: எஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான, ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தது குறித்து மாவட்ட எஸ்பி அபிநவ் தலைமையிலான தனிப்படை போலீசார், மறு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதலில், இறந்த கனகராஜின் குடும்பத்தாரிடம் விசாரித்தனர். அப்போது தான், பல்வேறு விஷயங்களை மறைத்த அண்ணன் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை கோத்தகிரி போலீசில் ஒப்படைத்து, அவர்களும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

 கனகராஜின் பைக் மீது மோதிய காரில் வந்தவர்களான பெரம்பலூரை சேர்ந்த நல்லதம்பி, மல்லிகா குடும்பத்தாரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தொடர்ந்து நேற்று, அந்த காரை ஓட்டி வந்த டிரைவரான தம்மம்பட்டியை சேர்ந்த ரபீக் (29) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்பி அபிநவ் நேரடி விசாரணையில் இறங்கியுள்ளார். இச்சம்பவத்திற்கு பின் ரபீக்குடன் சந்தேகப்படும்படி யாரேனும் பேசினார்களா?, வேறு யாருக்கும் இவ்விபத்து செயலில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். இவ்விசாரணை முடிவில் தான், அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்

Related Stories: