ரூ1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் அமைப்பு தலைவன் சிக்கினான்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் அமைப்பின் தலைவனை இம்மாநில போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் பிரசாந்த் போஸ் என்ற கிஷான் டா. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்ேவறு மாநிலங்களில் நக்சலைட் அமைப்பின் பொறுப்பாளராக இருந்து வந்தான். இவன் தலைக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ1 கோடி பரிசு அறிவித்து தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சாரண்டா வனப்பகுதியில் இவன் பதுங்கி இருந்து செயல்பட்டு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அவனையும், அவனது மனைவி ஷீலா மராண்டியையும் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவன் சிக்கி இருப்பதின் மூலம், இப்பகுதியில் செயல்பட்டு வரும் நக்சலைட் அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: