விராலிமலை பகுதியில் தொடர் மழை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குட்டை போல் ஆன கிணறு-மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு குளத்தில் தவறி விழுந்து பலி

விராலிமலை : விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தொடர் மழையால் ஒரு சில இடங்களில் சாலைகள் சேதடைந்தும், வீடுகள் இடிந்தும் கால்நடைகள் இறந்தும் வருகிறது. இதேபோல் விராலிமலை அருகே உள்ள கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தமுருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு தொடர் மழையினால் கிணற்றின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்து முழுமையாக சேதமடைந்தது.

இதேபோல் கொடும்பாளூர் கீழப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரது ஒரு செம்மறி ஆடும் தொடர் மழையால் இறந்தது. மேலும் வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகப்பன் என்பவரது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றபோது அங்குள்ள தென்னங்குடி குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது.

Related Stories: