பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பாலஸ்தீன சமூக ஆர்வலர்கள் 6 பேரின் செல்போன்கள் ஹேக்

ஜெருசலேம்: இத்தாலியின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் பல பேரின் செல்போன்கள் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் இந்தியாவிலும் புயலை கிளப்பியது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன சமூக உரிமை ஆர்வலர்கள் 6 பேரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேல் அரசால் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு மூலம் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக 6 சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் செல்போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் திருடுவதோடு மட்டுமின்றி, நிகழ்நேர நடவடிக்கைகளையும், தகவல் தொடர்பையும் கூட உளவு பார்த்துள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கையில் கூறி உள்ளனர். கடந்த வாரம் பெகாசஸ் உளவு மென்பொருளை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து தடை விதித்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. இது இஸ்ரேல் அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, என்எஸ்ஓ நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் என்றும், அதற்கும் இஸ்ரேல் அரசுக்கும் சம்மந்தமில்லை என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் லாபிட் கூறி உள்ளார்.

Related Stories: