சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு படுகை அணைகளை காண வரும் மக்களை திருப்பி அனுப்பும் போலீசார்

திருக்கனூர் :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள படுகை அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையே நேற்று திறந்து விடப்பட்ட தண்ணீரால் மணலிப்பட்டு - கூனிச்சம்பட்டு ஆகிய ஊர்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை பார்க்க நேற்று காலை முதலே சுற்றியுள்ள கிராம மக்கள் அங்கு குவிந்தனர். பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் இருக்க அவர்களை திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும், வருவாய், பொதுப்பணி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், செட்டிப்பட்டு, கைக்கிளைப்பட்டு, செல்லிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள படுகை அணைகளும் நிரம்பி வழிகின்றன. அங்கு வரும் பொதுமக்களையும் திருப்பி அனுப்பும் பணியில்போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: