செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கனஅடியாக அதிகரிப்பு.! கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று  காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

காலையில் 600 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1590 கன அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது நீர்‌ வரத்து தொடர்ச்சியாக உயர்வதால்‌ செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ நீர்‌ மட்டம்‌ வேகமாக உயர்ந்து வருவதால் அணையின்‌ வெள்ள உபரி நீர்‌ வெளியேற்றும்‌ ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி, ஏரிக்கு வரும்‌ உபரி நீரை அணையின்‌ பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்‌ 1.30 மணி அளவில்‌ வினாடிக்கு 500 கன அடி உபரி நீர்‌ 5 கன் மதகுகளில் 2 செட்டரின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து 3 மணிக்கு இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்  4-வது மதகிலிருந்து மேலும் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,000 லிருந்து 2,000 கன அடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் தெரிக்கின்றன.

Related Stories: