தொடர் கனமழையால் வடசென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அதிகாரிகளுடன் சென்று ஆய்வு பணியை முதல்வர் தொடங்குகிறார். சென்னை டவுட்டன், கே.என்.நகர், ஓட்டேரி, பாடி மேம்பாலம், பேப்பர் மில் ஆகிய பகுதியில் முதலமைச்சர் பார்வையிடுகிறார். வடசென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை முதல்வர் நேரில் ஆய்வு செய்கிறார். எழும்பூர், டவுட்டன், கே.என் கார்டன், படலம், புதிய அரண்மனை சாலை, ஓட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்யா நகர் தங்குமிடம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார். பாடி பாலம் வழியாக பாபா நகர், ஜிகேஎம் காலனி, ஜவஹர் நகர், வழியாக காகித ஆலை சாலையை பார்வையிடுகிறார். நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சென்னையில் 41 இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. 17 இடங்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. 5 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  மேலும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் 2015-ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் மாத்தில் ஒரே நாளில் 20 செ.மீ.க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு. மதுரை மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. 4 குழுக்கள் 3 மாவட்டங்களுக்கு மீட்புபணியில் ஈடபட உள்ளனர்.

Related Stories: