தீபாவளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு விழா: 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை: தீபாவளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான மஞ்சுவிரட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளை, வடமாடு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், விராச்சிலை என்ற பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

அங்கு 600க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய 5000க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்தனர்.            

Related Stories: