மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம் அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த ப.உ.செம்மலுக்குரிய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அவரை பணி நீக்கியிருப்பது அநீதியானது ஆகும்.

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தரப்பு நியாயத்தையும், விளக்கத்தையும் கோராமல் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிக்கு தண்டனையாக அமைந்து விடும். எனவே, அவர் மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: