ம.பி. மாநிலம் காண்ட்வா உட்பட 3 மக்களவை, 29 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது..!!

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் காண்ட்வா உட்பட 3 மக்களவை தொகுதி மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள மத்தியப்பிரதேசத்தின் காண்ட்வா தவிர ஹிமாசலப்பிரதேசத்தில் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் அவேலி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று மத்தியப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், மேற்குவங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதிகபட்சமாக அசாமில் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 4, மத்தியப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகளிலும், கர்நாடகம், ராஜஸ்தான், பீகாரில் தலா 2 இடங்களிலும் ஆந்திரா, அரியானா, மராட்டியம், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 1 சட்டமன்ற தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: